க்ரைம் பிரான்ஞ்ச் விசாரணையில் அமலா பால்

திங்கள், 20 நவம்பர் 2017 (15:46 IST)
சொகுசு கார் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில், அமலா பாலை இனி க்ரைம் பிரான்ஞ்ச் போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர்.


 
 
சில மாதங்களுக்கு முன்பு சொகுசு கார் வாங்கிய அமலா பால், அதைத் தன்னுடைய சொந்த ஊரான கேரளாவில் பதிவுசெய்தால் நிறைய வரி கட்ட வேண்டும் என்பதால், போலி முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்தார். இந்த விவகாரம் வெளியாகி, பெரும் சர்ச்சை வெடித்தது.
 
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சரே அமலா பாலுக்கு ஆதரவாகப் பேசினார். இந்நிலையில், அமலா பால் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனத் தெரியவர, வழக்கை க்ரைம்  பிரான்ஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்