கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் கதை, பிரபுதேவாவின் சொந்தக்கதையா?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:30 IST)
கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் கதை, பிரபுதேவாவின் சொந்த வாழ்க்கையில் நடந்த கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 


 

பிரபுதேவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்தப் படத்தில் விஷால், கார்த்தி இருவரும் ஹீரோக்களாக நடிப்பதாக கூறப்பட்டது. ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் ஷூட்டிங்கும் போனார்கள்.

ஆனால், திடீரென இரண்டு ஹீரோக்களுமே இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்கள். காரணம், பிரபுதேவாவின் சொந்தக்கதையைத் தான் படமாக எடுக்கிறாராம். அந்தக்கதை, இன்னொரு நடிகரையும் சம்பந்தப்படுத்தி இருப்பதை லேட்டாகப் புரிந்து கொண்டவர்கள், தங்களுடைய கால்ஷீட் ஃப்ரீயாக இல்லை என்று சொல்லி படத்தில் இருந்து கழண்டு கொண்டார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்