“கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது” - சந்தோஷ் நாராயணன்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (16:03 IST)
‘கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது’ எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்க்குரி’ என 4 படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும் படத்துக்கு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
எனவே, முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் தவிர்த்து வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்றுகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதுகுறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேட்டபோது, “கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகிறது. எனக்கு அனிருத் மியூஸிக் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்