ஜகமே தந்திரம் படத்துக்கு டிவிஸ்ட்டாக அமைந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:50 IST)
ஜகமே தந்திரம் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனைவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மதுரையில் லோக்கல் டானாக நடித்திருக்கும் தனுஷ் லண்டன் சென்று மிகப்பெரிய டான் ஆவதுதான் கதை. ஆனால் அதை திரைக்கதையில் சரியாக கையாளததால் படம் பப்படம் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் லண்டனுக்கு தப்பி செல்ல காரணம் கொலை ஒன்றை செய்வதுதான். ஆனால் அந்த கொலைக்கு சாட்சி யாரும் இல்லை என நினைக்கும் போது ஒரு பெண்  தனுஷின் திருமணத்தை நிறுத்தி விடுவார். அந்த பெண் வேறு யாரும் இல்லை. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனைவி சத்ய ப்ரேமாதானாம். இவர் ஏற்கனவே பேட்ட மற்றும் இறைவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்