அண்ணியுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட முதல் செல்ஃபி - வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (12:17 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக சூர்யா குடும்பம் இருந்து வருகிறது. அப்பா சிவகுமார், தம்பி கார்த்தி , மனைவி ஜோதிகா , தங்கை பிருந்தா என குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமாவில் இருந்து வருகின்றனர். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது முதன் முறையாக கார்த்திக்கு அக்காவாக "தம்பி" என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் உள்ளிட்டவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
இந்நிலையில் தற்போது கார்த்தி மற்றும் ஜோதிகா தம்பி படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிறுவயதில் பிரிந்து போன தம்பி அக்காவிடம் ஒன்று சேருவாரா? இல்லையா? என்பதை மையக்கருவாக வைத்து கதை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்