ரிலீஸுக்கு தயாராகும் கார்த்தியின் மெய்யழகன் பட ரிலீஸ் எப்போது?

vinoth

வியாழன், 9 மே 2024 (15:12 IST)
96 என்ற வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்தார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் படத்துக்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தபடத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்