அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!

J.Durai

புதன், 8 மே 2024 (14:09 IST)
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு  ராஜூ சந்ரா இயக்கத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்!
 
ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்,
ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரித்துள்ளனர்.
 
மாதன்ஸ் குழுமம்   இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில்,  இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். 
 
ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.
 
விரைவில் திரைக்கு வர உள்ளது  "பிறந்தநாள் வாழ்த்துகள்" திரைப்படம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்