அண்ணியை நினைத்து பாவப்படும் மைத்துனர்!!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (14:46 IST)
ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.


 
 
இதில் மகளிர் மட்டும் படக்குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் கார்த்தியும் கலந்துகொண்டார்.
 
அப்போது நிகழ்ச்சியில் கார்த்தி பேசினார். அவர் பேசியதாவது, இந்த படத்தில் எல்லா காட்சிகளையும் முழுமையான மாஸ்டர் டேக் எடுத்த பிறகு தான் எடுத்திருக்கிறார்கள்.
 
இது மிகவும் சவலான ஒன்று. அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. படம் பெண்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோரும் பார்க்கும் படமாகவும் இருக்கும். அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் என கார்த்திக் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்