என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 20 மே 2025 (10:42 IST)

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் சில நிமிட கேமியோ காட்சியில் நடித்திருந்தார். அதே போல அவர் நடித்து சமீபத்தில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அவருக்கு ஒரு ரி எண்ட்ரியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய சினிமா கேரியரில் முக்கியமானப் படங்களாக அமைந்தவை என்று அவர் வாலி, துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பிரியமானவளே ஆகியவற்றைக் கூறியுள்ளார். இதுபற்றி “1999 ஆம் ஆண்டுதான் நான் சரியானக் கதைகளை தேர்வு செய்து நடிக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு சிறு வேடமோ அல்லது பாடல் காட்சியோ எதுவாக இருந்தாலும் அதில் என்னுடைய முழுப் பங்களிப்பையும் கொடுக்கவேண்டும் என முடிவு செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்