சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் கன்னட திரைப்படவிழா 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இந்த விழாவை கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் பியங்கா கார்கே தொடங்கி வைக்கிறார். திரைப்பட விழாவில் கர்நாடகாவில் வசூல் குவித்து விருதுகள் வாங்கிய 10 கன்னட மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இதில் திதி திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்று சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. யு டர்ன் திரைப்படம் லூசியா படத்தை இயக்கியவரின் இரண்டாவது படம். சிவலிங்கா நம்மூர் பி.வாசு இயக்கியது.