மாஸ்டர் படத்தை சுட்டிக்காட்டி நடிகை கங்கனா அதிருப்தி.!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (18:17 IST)
நடிகை கங்கனா ரனாவத் நடித்த தலைவி திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரிலீசில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இதுகுறித்து கூறிய போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பெரிய ஸ்டார் படங்களுக்கு ஒரு விதியும் மற்ற நடிகர் நடிகைகளின் படங்களுக்கு ஒரு விதியும் வைத்துள்ளதாக கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் 
 
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியான போது எந்த திரையரங்கு உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார் தலைவி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும் என திரையரங்குகள் நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து மாஸ்டர் படத்தை ஒப்பிட்டு அவர் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்