ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தினர். ஆனால் படம் தேசபக்தி பற்றிய படம் என்பதால் ரிலீஸூக்கு பிறகு எதிர்ப்புக்குரல்கள் அடங்கியுள்ளன. படம் ரிலீஸாகி 2 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.
இதையடுத்து இந்த வெற்றியை பலரும் “வெறுப்பின் மீதான் அன்பின் வெற்றி” என ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இந்த ட்வீட்களுக்கு பதிலளிக்குமாறு கங்கனா “அன்பின் வெற்றி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். யார் வெறுப்பின் மீதான யாரின் அன்பு என்பதைப் பார்க்கவேண்டும். அது இந்தியாவின் அன்பு. 80 சதவீதம் இந்து மக்கள் வாழும் இந்தியாவில் எதிரி நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை நல்ல முறையில் காட்டி இருக்கும் பதான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்திய முஸ்லீம்கள் தேசப்பக்தர்களாகவும், ஆப்கானிஸ்தான் பதான்களிடம் இருந்து மிகவும் வேறுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன். படத்தின் கதைப்படி இந்தியன் பதான்” என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.