ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் படம் தேசபக்தி பற்றிய படம் என்பதால் ரிலீஸூக்கு பிறகு எதிர்ப்புக்குரல்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் படம் பெற்றுள்ளது. தொடர்ந்து பாலிவுட் படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இந்த ஆண்டில் பதான் படத்தின் மூலம் ஷாருக் கான் வெற்றிக்கணக்கை தொடங்கிவைத்துள்ளார் என பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல் நாளில் மட்டும் பதான் திரைப்படம் 55 கோடி ரூபாய் இந்தி பேசும் பகுதிகளில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.