என் இயக்குனர்கள் யாருமே என்னை மதிக்கவில்லை… கங்கனா ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:24 IST)
நடிகை கங்கனா ரனாவத் தலைவி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் இன்று 3 மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் ரிலீஸ் விழாவில் சென்னையில் நடைபெற்ற போது அதில் கங்கனா கலந்துகொண்டார். அப்போது பேசிய கங்கனா ‘இதுவரை நான் நடித்த ஏராளமான இந்தி படங்களிலும் கதாநாயகர்களுக்கு இணையான முக்கியத்துவம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் விஜய் என்னை மரியாதையுடன் நடத்தினார்’ எனப் பேசிக்கொண்டே இருக்கும்போதே கண்ணீர்விட்டு அழுக ஆரம்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்