''ஜெயிலர்'' பட புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:39 IST)
மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும்  ரஜினிகாந்த் இருவரின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும்  ரஜினிகாந்த் இருவரும் பேசுவது போன்ற போஸ்டர் வைரலகி வருகிறது.

இப்படத்தின் காவாலா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

UNSTOPPABLE

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்