கரூர் சம்பவத்துக்கு நாம் அனைவருமேதான் பொறுப்பு.. அஜித் கருத்து!

vinoth

சனி, 1 நவம்பர் 2025 (07:33 IST)
தனது நீண்ட நாள் கனவான மோட்டார் ஸ்போர்ட்ஸில் அஜித் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார். இனிமேல் ஆண்டுக்கு ஒரு படம் மீதி நாட்களில் கார் பந்தயங்கள் எனக் கவனம் செலுத்தவுள்ள அதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற அணியையும் உருவாக்கியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சீசனை முடித்துவிட்டு தன்னுடைய அடுத்தப் பட வேலைகளைத் தொடங்கியுள்ள அஜித் ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் அளிக்கும் ஒரு பேட்டி இது.

இந்த நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர் கரூர் துயர சம்பவம் குறித்தும் பேசியுள்ளார். அதில் “கரூர் சம்பவத்துக்கு ‘அந்த தனிநபர்’ மட்டும் பொறுப்பல்ல. நம் எல்லோரும்தான் பொறுப்பு. ஊடகங்களுக்கும் இதில் பொறுப்புண்டு. கூட்டம் கூட்டுவதை பெரிய விஷயமாகக் காட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். விளையாட்டுகளில் கூட்டம் கூடினாலும் இதுபோல இழப்புகள் நடப்பதில்லை. சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் முதல் நாள் முதல் காட்சி ஆகியவற்றில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகின்றன. ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம். ஆனால் அதற்காக உயிரைப் பணயம் வைக்கக் கூடாது. அன்பைக் காட்ட வேறு வழிகள் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்