காஞ்சனா 3 திரை விமர்சனம்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (15:03 IST)
தமிழ்சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து தனது திறமை மூலமாக  சினிமா நடிகராக இசையமைப்பாளராக, இயக்குநராக  பல பரிமாணங்களை எடுத்திருப்பவர் ராகவா லாரன்ஸ்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளியான முனி படத்தின் அசரல் புரசலான வெற்றி காஞ்சனா 2 வரைக்கும் தொடர்ந்ததுதான் தற்போது காஞ்சனா  3வது பாகத்தை எடுக்கத் தூண்டியுள்ளது என்று சொல்லலாம்.
 
 ராகவா லாரன்ஸ் இயக்கி அவரது நடிப்பில்  வெளிவந்துள்ள படம் தான் காஞ்சனா 3
 
இனி   படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் :
 
தனது தாத்தாவின் 60 வது திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்கிறார் ராகவா லாரன்ஸ். அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதே இடத்தில்  இதற்கு முன் ஒரு பயங்கரமான பேயை ஒரு ஆணியில் அடித்து வைத்திருந்தது தெரியாமல் ராகவா லாரன்ஸ் அதை கையில் பிடுங்குகிறார்.
 
அந்த பேய் லாரன்ஸ்குள் புகுந்து அவருடைய வீட்டிற்கே வந்துகிறது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பேய் லாரன்ஸ் மூலமாக தன் ஆசையை எப்படி  நிறைவேற்றிக் கொள்கிறது என்பது தான் கதை.
 
இதிலும் கோவை சரளா தன் பங்குக்கு மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
ஹீரோயின்கள் வேதிகா, ஓவியா, மற்றொரு புதுமுக ஹீரோயின் என மூன்றுபேர் மூன்று பேரும் லாரன்ஸை காதலிப்பதாக உள்ள காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுள்ளது. ஏற்படுத்துகிறது. இரவில் பேய் வருவது ரசிகர்களுக்கு திகிலூட்டுவதாக உள்ளது
 
அதேபோன்று காமெடியிலும் தன் உடல் மொழி( body langugae), வசனம் கூறல் 9 dialouge) (delivery), என்று நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார் லாரன்ஸ். இதெல்லாவற்றையும்விட லாரஸ்சுக்குள் பேய் வந்து அவரை வைத்து தான் நினைத்ததை செய்யும் காட்சிகளை ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறது.
 
இந்த படத்தின் பாசிட்டிவ் என்ன அப்பிடீனா :
 
வழக்கம் போலவே இந்தப் படத்திலும் பிளாஷ் பேக் வைத்து ரசிகர்களையும் எமோஷனலாக்கிவிட்டார் என்று சொல்லலாம்.  மேலும் ஸ்ரீமன் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.படம் பார்க்கும் போது இசை மிரட்டலாக இருக்கிறது. 
 
இப்படத்திற்கு ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கேமரா செல்லும் ஒவ்வொரு காட்சியும் நம் கண்ணில் ஒட்டிக்கொள்கிறது. பேயைக் காட்டும் போது உதறல் ஏற்படுவது நிஜம்.
 
மொத்தத்தில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை குதூகளிக்க வேண்டிய ஹாரர் படம் தான் காஞ்சனா 3.
 
நெகடிவ் அப்டீனு பாத்த :
 
லாரன்ஸ் தன் இருப்பை தக்க வைக்கத்தான் தனக்குத்தானே பில்டப் கொடுக்கறார என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புது?அனுமன் வாலு மாதிரி நீளமா இருக்குது படத்தின் பிளாஷ் பேக்  மத்தபடி எல்லோரும் லாஜிக் எதிர்பாக்காம படம் பார்த்தால் காஞ்சன எல்லோரையும் ரசிக்க வைக்கும்.

டுவிட்டர் திரைவிமர்சனம்:
 




 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்