ரஜினி கொடுத்த அப்டேட்டால் நிம்மதி பெருமூச்சு விட்ட சூர்யாவின் ‘கருப்பு’ படக்குழு!

vinoth

வியாழன், 25 செப்டம்பர் 2025 (12:23 IST)
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. படத்தில் சூர்யா கருப்பு என்று சிறு தெயவமாகவும், வழக்கறிஞராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டாலும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் நடக்காததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

ஆனால் படக்குழு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதே தேதியில்தான் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனால் கருப்புப் படக்குழு தயக்கத்தில் இருந்த கருப்புப் படக்குழுவுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நேற்று ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் 2 படம் ஜூன் 12 ஆம் தேதிதான் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ‘கருப்பு’ ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்