மருதநாயகம் வரும்; ஆனா நான் வருவேனானு தெரியாது! கமல் சூசகம்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (18:21 IST)
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல் திருவள்ளுவர் விவகாரம் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் சர்ச்சை குறித்து பேசிய அவர் ”திருவள்ளுவர் எந்த மதத்தையும் சாராத பொது சிந்தனைகளையே மக்கள் முன் வைத்துள்ளார். ஆனால் அவரை ஒவ்வொரு இயக்கமும் சொந்தம் கொண்டாடுவதை பார்க்கும்போது, திருவள்ளுவரை தனதாக்கி கொள்ள வேண்டும் என்கிற அவர்களது போட்டி மனப்பான்மையே தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் கமல்ஹாசனிடம் அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் குறித்து கேள்வியெழுப்பியபோது ”மருதநாயகம் வரும். ஆனால் அதில் நான் வருவேனா என்றால் சந்தேகம்தான்” என கூறியுள்ளார்.

இதனால் கமல்ஹாசன் மீண்டும் மருதநாயகம் படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், ஆனால் நாயகனாக தான் நடிக்காமல் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்