விஜய் டிவிக்கு எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்: கமல்டா...

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (00:06 IST)
ஒரு சேனலில் தொகுப்பாளராகவோ, பங்கேற்பாளர்களாகவோ இருந்தால் அந்த டிவிக்கு ஜால்ரா போடுவது தான் வழக்கம். குறிப்பாக விஜய் டிவியில் இந்த ஜால்ரா மிக அதிகம். அதை 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் அதிகம் பார்க்கலாம்.



 
 
ஆனால் விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக இருந்து கொண்டு அவர்கள் கொடுத்த மேடையில் நின்று கொண்டு விஜய் டிவியையே எச்சரிக்கும் தைரியம் உண்டு என்றால் அது கமல்ஹாசனுக்கும் மட்டுமே உண்டு.
 
இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பதற வைத்த கமல்ஹாசன் இடையே விஜய் டிவிக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்தார். எதை காண்பிக்க வேண்டும், எதை காண்பிக்க கூடாது என்பதற்கு ஒரு சமூக பொறுப்பு வேண்டும். விஜய் டிவி அதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்/
 
ஏற்கனவே நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் கொடுக்கப்பட்ட டாஸ்க்குக்கு கண்டனம் தெரிவித்து இந்த மாதிரி இனிதொடர்ந்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவேன் என்று எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்