கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 2 மே 2022 (18:11 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் மே 15-ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 
 
‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் தெரிந்தது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்