கேஜிஎஃப் 2 படத்தை தியேட்டரில் பார்த்த கமல்ஹாசன்- இளையராஜா

வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:10 IST)
கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2.  சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல்சாதனை படைத்துள்ளது.

அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்ததால் விரைவில் இப்படத்தின் 3 வது சேப்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியாப் படமாக சாதனைப்படைத்துள்ள நிலையில், கேஜிஎப்-2 படத்தை நடிகர் கமல்ஹாசனும், இளையராஜாவும் தியேட்டரில் பார்த்து ரசித்தனர்.

மேலும், கேஜிஎப்-2 படத்தை இளையராஜா.கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கேஜிஎப்-2 படக்குழுவினரை இருவரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்