இணையத்தில் டிரெண்ட் ஆகும் கமல்ஹாசன் பட டிரைலர்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (20:41 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அது மட்டுமின்றி கமலஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து அவருக்கு சிறப்பு விழா எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நாளில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ள உள்ளனர்
 
இந்த நிலையில் எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் கமலஹாசன் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கமலஹாசனின் மிகச் சிறப்பான நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான ‘ஹே ராம்’ படத்தின் டிரைலரை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரை கமல் ரசிகர்களே கூட பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் வசதி இல்லை. டிரைலரை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையில் மிக சிலரே இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து இருப்பார்கள் 
 
அந்த வகையில் இன்றைய தலைமுறையினர்கள் ஹேராம் படத்தின் டிரைலரை பார்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ராஜ்கமல் நிறுவனம் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.
 
கமலஹாசன், ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமாமாலினி உள்பட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அட்டகாசமாக உள்ளதாக இன்றைய இளைய தலைமுறையினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காந்தி சுடப்படும் காட்சி ஹாலிவுட் படத்தை போலவே இருப்பதாகவும் கமலஹாசனின் மிகச் சிறப்பான இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்