இந்த நிலையில் கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கு செல்லும் வகையில் தன்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். எனவே மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் தனது கட்சியையும் அவ்வப்போது பிரபலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். தனது முடிவினை விஜய் டிவியிடம் அவர் தெரிவிக்க, டிவி நிர்வாகத்தினர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 என்ற விளம்பரம் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.