தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்- சிவக்குமாரை வாழ்த்திய கமல்

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:22 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார். இவர், சினிமாவில்  அன்னக்கிளி, சிந்துபைரவி, காதலுக்கு மரியாதை, சேது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகிய பின்னர், சின்னத்திரையில் நடித்து வந்தார். தற்போது, பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார்.

இந்த நிலையில், இன்று பிறந்த நாள் காணும் சிவக்குமாருக்கு  நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும்  பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்