கமல்ஹாசன் செய்வது நல்ல மனிதனுக்கு அழகில்லை: ஜே.கே.ரித்தீஷ்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (15:29 IST)
நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் ஆதாரம் இருந்தால் தாராளமாக முதல்வரை சந்தித்து கொடுக்கலாம். அதைவிட்டு மக்களை தூண்டிவிடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை என்றும் முன்னாள் அதிமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.


 

 
கமல்ஹாசன் தமிழக அரசு ஊழலில் நிரம்பி வழிக்கிறது என்று பேட்டி ஒன்றில் கூறினார். அதைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் அவரை விமர்சித்து கருத்துகளை தெரிவித்தனர். தமிழக முதல்வரும் கமல்ஹாசன் குறித்து பேசினார். இதனால் கமல்ஹாசன் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் டுவிட்டரில், தமிழக மக்களிடம் ஊழல் குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் அனுப்புங்கள் என்ற அமைச்சர்களின் இணையதள முகவரியை பதிவிட்டார்.
 
இதையடுத்து பல சர்ச்சை எழுந்தது. இணையதளத்தில் அமைச்சர்களின் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் குறித்த விவரங்கள் மறைந்து போனது. இந்நிலையில் நடிகரும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நடிகர் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது தன்னிச்சையாக தொலைக்காட்சி உரிமையை வழங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு உள்ளது. அதில் கமல்ஹாசனுக்கும் பங்கு உள்ளது. அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். 
 
தன்னிடம் ஆதாரம் இருந்தால் தாராளமாக கமல் அதை முதல்வரிடம் கொடுக்கலாம். அதைவிட்டு டுவிட்டரில் கொடு, வாட்ஸ்அப்பில் கொடு என மக்களை தூண்டிவிடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை என்றார்.
அடுத்த கட்டுரையில்