ஷோலே படத்தில் டெக்னீஷியாக பணியாற்றிய கமல்ஹாசன்… அவரே பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

திங்கள், 24 ஜூலை 2023 (09:51 IST)
1975ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளியான ஷோலே, தற்போதுவரை இந்தியாவின் முக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், சஞ்சீவ் குமார், ஹேமமாலினி என ஹிந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த ஷோலே, வெளியானவுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து ரசிகர்கள் திரையரங்குகளில் குவிய ஆரம்பித்தனர்.

60 திரையரங்குகளில் பொன்விழா கண்ட இந்தத் திரைப்படம், 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கண்டது. ஆர்.டி. பர்மன் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும் இந்தியா முழுவதும் கேட்டு ரசிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றியதாக நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் நடந்த பிராஜக்ட் கே அறிமுக விழாவில் தெரிவித்துள்ளார். பிராஜக்ட் கே திரைப்படத்தில் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்