யு/ஏ சான்றிதழ் பெற்ற கலகலப்பு 2

வெள்ளி, 19 ஜனவரி 2018 (20:37 IST)
சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கடந்த பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்