ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பு: ஹெச்டிஎப்சி-க்கு புது கவுரவம்!

வெள்ளி, 19 ஜனவரி 2018 (19:30 IST)
இந்தியாவில் உள்ள தனியார் வங்கி நிறுவனங்களில் பிரபலமான நிறுவனமான ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பில் ரூ.5 லட்ச கோடியை தாண்டி புதிய கவுரவத்தை எட்டிப்பிடித்துள்ளது. 
 
ஆம், ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இந்த இலக்கை அடைந்த முதல் வங்கி இதுதான். மேலும் 5 லட்சம் கோடி தாண்டிய மூன்றாவது நிறுவனம் இதுவாகும். இதற்கு முன்னர் ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இந்த சாதனையை படைத்துள்ளது. 
 
மேலும், சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் இடத்தில் ரூ.5.82 லட்சம் கோடியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கிறது. அடுத்து இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாக இருக்கிறது. 
 
ஹெச்டிஎப்சி வங்கி சந்தை மதிப்பு ரூ.5,00,360 கோடியாக இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் இந்த பங்கு 42% உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டில் 5% உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் சராசரியாக 20% வளர்ச்சியை ஹெச்டிஎப்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்