இவ்வளவுதான் வசூல் வருமா?... கலெக்‌ஷனில் படுத்த கலகத் தலைவன்!

வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:26 IST)
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியாகியுள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும், இந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் ஒன்றும் எழவில்லை.

ஆனால் படத்துக்கு வசூலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாம். பல திரையரங்குகளில் படம் ரசிகர்கள் கூட்டம் இன்றி ஓடி வருகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரின் பங்காக ஒரு கோடி ரூபாய் அளவுக்குதான் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்