வசூலில் பின் தங்கும் உதயநிதியின் கலகத் தலைவன்!

புதன், 23 நவம்பர் 2022 (08:57 IST)
கலகத்தலைவன் திரைப்படம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியாகியுள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும், இந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் ஒன்றும் எழவில்லை.

ஆனால் படத்துக்கு வசூலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாம். பல திரையரங்குகளில் படம் ரசிகர்கள் கூட்டம் இன்றி ஓடி வருகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்