உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

Siva

ஞாயிறு, 16 ஜூன் 2024 (09:45 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து 181 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி விளையாடிய நிலையில் கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களும் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களும் எடுத்த ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் 6 அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்ட நிலையில் இந்த தோல்வி காரணமாக ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்