ஜோஸ் பட்லருக்கு மூன்றாவது குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து மழை!

vinoth

சனி, 15 ஜூன் 2024 (07:01 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தற்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ஜோஸ் பட்லர். அவர் தலைமையில் கடந்த  2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டியிலேயே வெளியேறியது.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வரும் டி 20 உலகக் கோப்பையில் பட்லர் விளையாடி வரும் நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் அறிவிக்க ரசிகர்கள் அவருக்கும் அவர் மனைவிக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பட்லருக்கு ஏற்கனவே ஜார்ஜியா மற்றும் மார்கட் ஆகிய பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பிறந்துள்ள இந்த குழந்தைக்கு சார்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிவித்துள்ள பட்லர் குழந்தையின் முகம் தெரியாத புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்