ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:59 IST)
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

பி பிரிவில் தற்போது ஒரு முக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் பிராண்டன் மெக்மில்லன் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இப்போது ஆஸி ஒரு விக்கெட்டை இழந்து பேட் செய்து வருகிறது.

இந்த போட்டியில் ஒருவேளை ஆஸி அணி தோற்றால் அந்த பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் புள்ளி அடிப்படையில் முன்னேறிவிடும். ஒருவேளை ஸ்காட்லாந்து தோற்கும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னேறிவிடும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்