இரண்டாம் திருமணம் குறித்து பதிவிட்ட சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (12:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் தெரியாமல் இருந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு பேரும் புகழும்  ஏற்படுத்திக்கொடுத்து பிரபலமாக்கி விடுகிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் தங்களது கேரியரை நிலைநிறுத்திக்கொள்கின்றனர். 
வசூல்ராஜா எம்பிபிஎஸ், டிஷ்யூம் , சிங்கம், கோ,  மௌனகுரு, கௌரவம்,  இரும்பு குதிரை , கலகலப்பு2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த காஜல் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றனர். பின்னர் சாண்டிக்கு சில்வியா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு லாலா என்ற பெண் குழந்தை பெற்றனர். 
 
ஆனால், காஜல் இன்னும் அப்டியே தான் இருக்கிறார். இதற்கிடையில் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தனர். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் காஜல், குழந்தை இருப்பவர்களுக்கும், கணவர் இருப்பவர்களுக்கும் சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சியை நடத்துவது போன்று என்னைப்போல விவாகரத்து ஆன நபர்களுக்கு ‘முரட்டு சிங்கிள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தலாமே என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியை  குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கமெண்ட்ஸ் செய்த ரசிகர் ஒருவர், "தலைப்பு நல்லாதான் இருகின்றது காஜல் டார்லிங். ஆனால் உங்களுக்கு வயசு ஆகிடுச்சா இல்லையே, மிகவும் வடிவாக இருக்கின்றீர்கள். நீங்களும் திருமணம் முடிக்கணும் வாழ்க்கையில் எப்பவும் மகிழ்ச்சியுடன் திருமணம் எனக்கு தங்கள் நினைவு வரும்போதெல்லாம் இதை நினைப்பேன். மா.." என குறிப்பிட்டிருந்தார். 
 
அதற்கு பதிலளித்த காஜல், உங்கள் கரிசனத்திற்கு மிக்க நன்றி. எனக்கு நம்பிக்கை குறைபாடு இருக்கிறது. நான் இப்போது தனியாக வாழ்வது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது தனியாக வேலை தான் முக்கியம். எனக்கு நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நான் தொடர்ந்து பிசியாக இருந்து நன்றாக சம்பாதித்து என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டால் அதுவே எனக்கு சந்தோஷம். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று அந்த ரசிகருக்கு பதில் அளித்திருந்தார் காஜல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்