உலகம் முழுவதும் தற்போது ஆஸ்துமா எனப்படும் மூச்சுதிணறல் நோயால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாடு, சுகாதாரமின்மை, அதிக பனிப்பொழிவு என ஆஸ்துமா உருவாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில் சிறு குழந்தைகள் உட்பட ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு பதிவை நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தான் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், இன்ஹேலர் பயன்படுத்தியதாலேயே தன்னால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் இன்ஹெலர் பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.