கபாலி டிக்கெட்கள்... அரசே இலவசமாக வழங்கும் வினோதம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (10:53 IST)
பொதுச்சேவையை முறையாக பயன்படுத்துகிறவர்களுக்கு கபாலி படத்தின் டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.


 


நல்லவேளையாக அது தமிழ்நாட்டு ஆளுநர் கிடையாது. புதுச்சேரியிர், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் கிரண் பேடி.
 
கிரண் பேடி பதவியேற்றது முதல் தனக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் மூக்கை நுழைத்து வருகிறார். அவர்தான், பொதுச்சேவையை முறையாக பயன்படுத்துகிறவர்களுக்கு கலெக்டரே கபாலி டிக்கெட்களை வழங்குவார் என்று அறிவித்துள்ளார். 
 
அத்துடன், சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி திட்டத்துக்கு சிறப்பு தூதராக இருக்க ரஜினியை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஆய் போனால் கழுவ வேண்டும் என்பதையும் ரஜினி சொன்னால்தான் நாட்டு மக்கள் கேட்பார்களோ?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்