கபாலி படத்தின் வெற்றிக்காக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் காளஹஸ்தியில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார்.
கபாலி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தனது படம் வெளியாகும் போது திரப்பதிக்கோ வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கோ சென்று வழிபடுவது ரஜினியின் வழக்கம். சிலநேரம் தனியாக, சிலநேரம் குடும்பமாக.
இந்நிலையில் கபாலி படம் வெற்றி பெறுவதற்காக ரஜினி மகள் சௌந்தர்யா காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, அங்கு ராகு கேதுவுக்கு சிறப்பு பூஜை செய்தார்.
பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுணம்பிகா தாயாரை வழிபட்டார். குரு தட்சணாமூர்த்தி முன்பு வேத பண்டிதர்களிடம் ஆசி பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கபாலி படம் எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது.
தமிழ் தெலுங்கு ரசிகர்களை இந்த படம் கவரும். பெரிய வெற்றிப் படமாக அமையும். இந்த படத்தின் வெற்றிக்காக வாயுலிங்கேஸ்வரரின் ஆசியை பெறுவதற்காக இங்கு வந்தேன் என்றார்.