ரஜினியின் 'காலா'வும் அம்பேத்காரின் குறியீடும்

Webdunia
வியாழன், 25 மே 2017 (22:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இன்று மாலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. இந்த ஃபர்ஸ்ட்லுக் மும்பை தமிழ் பகுதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கவுள்ளதை காட்டியுள்ளது.



 




இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அண்ணல் அம்பேத்கரின் குறியீடாக இருப்பதாக ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அதாவது ரஜினி உட்காந்திருக்கும் காரின் நம்பர் MH 01 BR1956. இதில் BR என்பது அம்பேத்கரின் இனிஷியல் என்றும், 1956 என்பது அவர் மறைந்த வருடத்தை குறிப்பதாகவும் டுவிட்டரில் வதந்தி பரவி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒருசிலர் அம்பேத்கார் புத்த மதத்தை தழுவிய நாள் பற்றியதுதான் இந்த காரின் பதிவெண் குறிப்பதாகக் கூறிவருகின்றனர். இதன்மூலமாக, ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளிலேயே, காலா பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்