கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸ்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (18:19 IST)
கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மதில்கள் திரைப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இப்போது நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள திரைப்படம்தான் மதில். இந்த படத்தில் லஷ்மி காந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர் தன் வீட்டு சுவரில் அனுமதியின்றி படம் வரைந்த அரசியல்வாதிகளோடு மோதி வெற்றி பெறுவதே கதை. இது சம்மந்தமாக சில தினங்களாக கே எஸ் ரவிக்குமார் சில ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டார். இந்நிலையில் இந்த படம் இப்போது நேரடியாக ஜி 5 தளத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்