டெடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:11 IST)
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக அமைந்தது. இந்த படம் ஒரு ஸ்லீப்பர் ஹிட்டாக அமைந்தது.

இதையடுத்து ஆர்யாவும் சக்தி சௌந்தர்ராஜனும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். அந்த படத்தையும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவே தயாரிக்கிறார். இந்நிலையில் சக்தி சௌந்தர்ராஜனுக்கு ஒரு காரை பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்