என்ன KGF வாடை ஹெவியா அடிக்குது… ஜூனியர் என் டி ஆரின் தேவரா டிரைலர் எப்படி?

vinoth

புதன், 11 செப்டம்பர் 2024 (09:04 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸானது. டிரைலர் முழுக்க கதாநாயகனுக்கு பில்டப் கொடுப்பது போலவும், அதற்கான மாஸ் சீன்களுமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வரும் பிரகாஷ் ராஜினி வாய்ஸ் ஓவர் கேஜிஎஃப் படத்தில் வரும் பின்னணி போலவே உள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களை பெரியளவில் ஈர்த்தது போல தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்