வாடிவாசல் VFX பணிகளுக்காக லண்டன் செல்லும் வெற்றிமாறன்…!

vinoth

புதன், 11 செப்டம்பர் 2024 (06:44 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் நடித்து வரும் நிலையில், இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் வாடிவாசல் படத்துக்காக காளைகளை அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் அதை இறுதி செய்வதற்காக இயக்குனர் வெற்றிமாறன் விரைவில் லண்டன் செல்லவுள்ளார். அங்கு சென்று வந்தபின்னர் விடுதலை 2 ரிலீஸ் முடிந்த பின்னர் வாடிவாசல் படத்தின் பணிகளை அவர் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்