ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’: பாண்டிச்சேரி, தாய்லாந்தில் படமாகிறது!

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (10:54 IST)
ஜீவா நடிப்பில் உருவாகும் ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பு, பாண்டிச்சேரி மற்றும் தாய்லாந்தில் படமாக இருக்கிறது.
‘மகாபலிபுரம்’ என்ற படத்தை இயக்கிய டான் சாண்டி, ஜீவாவை வைத்து ‘கொரில்லா’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, யோகிபாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சிம்பன்ஸி நடிக்கிறது.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பாண்டிச்சேரியில் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக இருக்கிறது. பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்