ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த அதிரடி இயக்குனரா?

செவ்வாய், 31 மே 2022 (19:51 IST)
நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இயக்குனர் ஹரி தற்போது அருண்விஜய் நடித்த யானை என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அந்த படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது 
 
இதனை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை அவர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்