பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் லண்டனுக்கு பாடல் கம்போஸிங்குக்காக சென்ற போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆனது.
இப்போது சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாடலை பாடியுள்ளாராம். வடிவேலு தனது சினிமா கேரியரில் பாடிய எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள போன்ற பாடல்கள் தனிக் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.