திடீரென வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி திரைப்படம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (21:58 IST)
ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் அதன்பின்னர் இன்னும் ஜெயம் ரவியின் அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அவர் நடித்து முடித்துள்ள 'கோமாலி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் வரும் வெள்ளியன்று விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'கனா' நாயகன் தர்ஷனின் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் 'தும்பா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளாராம். இந்த தகவலை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த படக்குழுவினர் தற்போது படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி வெறும் பத்து நிமிடங்களே வருவார் என்றும் ஆனாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் தங்கும் வகையில் முக்கியமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
 
ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். மேலும் 'கலக்க போவது யாரு' புகழ் தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நரேன் இளன் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தியில் தயாராகியுள்ளது என்பதும், இந்த படத்தில் 'புலி' ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்