தியாகராஜ பாகவதர் பற்றி இரண்டு படங்கள்.... ஒரே நேரத்தில் உருவாகும் பயோபிக்

புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:15 IST)
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என போற்றப்படுபவர் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதர்.

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தியாகராஜ பாகதவர். இவர் நடித்த ஹரிதாஸ், அசோக்குமார் மற்றும் பவளக்கொடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்று, விடுதலை செயப்பட்டபின் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைய, தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றார்.

அப்படிபட்ட நடிகரான தியாகராஜ பாகவதரைப் பற்றி இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இயக்குனர் வசந்த், தியாகராஜ பாகவதரின் பயோபிக்கை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளாராம். இதை அமேசான் ப்ரைம் ஓடிடிக்காக இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சம்மந்தமாக உருவாகும் ‘தி மர்டர் மிஸ்டரி’ என்ற வெப் சீரிஸும் உருவாகிறது. இதிலும் என் எஸ் கே மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோரின் வாழ்க்கை பற்றிய வெளியே தெரியாத சம்பவங்கள் இடம்பெற உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்த வெப் தொடரை அறிமுக இயக்குனரான சூர்யபிரதாப் சோனி லிவ் ஓடிடி தளத்துக்காக இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்