ஆர்ஜே பாலாஜி, இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் மிக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். தனது பணியில் எந்தவித சமரசமும் செய்ய விரும்பாத அவரது குணம்தான், பலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளன. இதற்கு முன்னதாக, நடிகை நயன்தாராவுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது நடிகை திரிஷாவுடனும் மோதல் என தகவல் வெளியாகியுள்ளது.
'கருப்பு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு, மீதமுள்ள படப்பிடிப்பை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், நடிகர்கள் பலரும் தனிப்பட்ட உறவுச் சிக்கல்களைத் தங்கள் தொழிலுடன் கலந்துகொள்வதில்லை. அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதால், படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாகவே நடக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் இவர்களது மோதல், சக கலைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி விரைவில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.