ஜவான் படம் 11 நாட்களில் ₹858.68 கோடி வசூல்

திங்கள், 18 செப்டம்பர் 2023 (17:36 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்  ஜவான் படம் வெளியான 11 நாட்களில் மட்டும் ரூ.858 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான்  மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் ஜவான் படமும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், ஜவான் படம் வெளியான 11 நாட்களில் மட்டும் ரூ.858 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படக்குழு மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்